
செய்திகள் மலேசியா
எட்டாம் ஆண்டு முப்பெரும் விழாவில் விகாஷ் உட்பட 9 மாணவர்களுக்குப் பாரதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
மதுராந்தகம்:
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றம் ஏற்பாட்டில் எட்டாம் ஆண்டு முப்பெரும் விழாவில் விகாஷ் உட்பட 9 மலேசிய மாணவர்களுக்குப் பாரதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா மே 31-ஆம் தேதி தமிழ் நாட்டின் மதுராந்தகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கல்வி, கலை, அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கிய 9 மலேசிய மாணவர்கள் நாட்டைப் பிரதிநித்து இந்த விருதினை பெற்று கொண்டனர்.
இதில் நான்கு வயதான சிறுவன் விகாஷ் லோகேந்திரன்
118 தனிமங்களின் பெயர்களை நினைவில் வைத்து அதனை சரியாக கூறியதற்காக சாதனை செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், 10 உலகச் சாதனைகள் மற்றும் 2 சர்வதேச விருதுகள் பெற்ற 6 வயதான தேவிஷா நாயுடு விக்னேஸ்வரனுக்குச் சாதனை சிகரம் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற மாணவர்களின் முழு பட்டியல்:
1. Thenmozhi D/O Venkatasalam, 16 years old, SMK Raja Mahadi
Sathanai Sigaram Viruthu (Pinnacle of Achievement Award)
National chess champion – a rising star of intellect.
2. Veekhash Logendran, 4 years old, Preschool, Global Oak Tree School
Sathanai Semmal Viruthu (Achievement Excellence Award)
Memorized 118 chemical elements at age 3 – a scientific marvel!
3. Thevissha Naidu Vignesvaran, 6 years old, SJKT Sendayan, Negeri Sembilan
Sathanai Sigaram Viruthu
Holder of 10 world records and 2 international awards – a prodigy in memory skills!
4. Aayushi Yogeswaran, 9 years old, SJKT Taman Sentosa
Ilakkiya Thendral Viruthu (Literary Breeze Award)
Author of three published books – a young wordsmith of power!
5. Guru Prasad S/O Kaliyappan, 15 years old, Qiara Academy International School
Kalai Thendral Viruthu (Artistic Breeze Award)
Multiple award-winning model – a shining star in the modeling world.
6. Divya Panneer Selvam, 13 years old, SMK Bukit Jalil
Sathanai Sudar Viruthu (Shining Star of Achievement)
Talented in singing, athletics, and modeling – an all-rounder with grace.
7. Kashwiny Prakash, 10 years old, SK Convent, Sentul
Kalai Thendral Viruthu
International Queen with 3Major International award winner – a young fashion icon with flair.
8. Siva Maindhan S/O Mahendran, 10 years old, SJKT Masai, Johor
Kalai Sudar Viruthu (Radiant Artist Award)
National and international performer in classical dance – a gem of rhythm and grace.
9. Yazhini Pugazhendhi, 12 years old, SJKT Tan Sri Dato Manickavasagam
Sathanai Sigaram Viruthu
Excellent in public speaking, innovation, and critical thinking – a leading voice of her generation.
விருது பெற்ற மாணவர்கள் மேலும் தங்களின் துறைகளில் பல புதிய சாதனைகளை மேற்கொள்ள இந்த விருது அவர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையும் மலேசிய சாதனை புத்தக நிறுவனத்தின் செயலாளர் மற்றும் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளரான சரிதா பரமேஸ்வரன் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 4:36 pm
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்படும்
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 10:31 am
குற்றம் செய்யவில்லை என்றால், அன்வார் ஏன் விலக்குரிமை கேட்க வேண்டும்: துன் மகாதீர்
June 5, 2025, 10:30 am