நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது ஆயுதமேந்திய தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

இந்தியாவின் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது ஆயுதமேந்திய தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா இதனை உறுதிப்படுத்தியது.

இந்தியாவில் பிரபலமான உலகளாவிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் இந்த தாக்குதல் நடந்தது.

இந்நிலையில்  புதுடில்லியில் உள்ள மலேசிய தூதரகத்தின் மூலம்,  அமைச்சு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதி மலேசிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி செல்லும் பகுதியாக அறியப்படுகிறது.

உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில்,

இந்த சம்பவத்தில் எந்த மலேசிய குடிமக்களும் பாதிக்கப்படவில்லை.

மேலும் தூதரகம் மலேசிய சுற்றுலா குழுவின் தலைவருடன் தொடர்பில் உள்ளது. அவர் அந்த நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு தற்போது காஷ்மீரில் உள்ளார்.

குழுவின் தலைவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக எங்களுக்குத் தெரிவித்தனர் என்று விஸ்மா புத்ரா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset