
செய்திகள் மலேசியா
25 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தினால் கறுப்பு பண மோசடி வழக்கை தீர்க்க முடியும் என டான்ஶ்ரீ கூறியுள்ளார்: போலிஸ்
கோலாலம்பூர்:
25 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தினால் கறுப்பு பண மோசடி வழக்கை தீர்க்க முடியும் என டான்ஶ்ரீ கூறியுள்ள விவகாரம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
புக்கிட் அமானின் பணமோசடி தடுப்பு குற்றப் புலனாய்வுக் குழு (அம்லா) தலைவர் டத்தோ முகமது ஹஸ்புல்லா அலி இதனை தெரிவித்தார்.
கடந்த மார்ச் 29 அன்று ஜப்பானின் ஒசாகாவில் இருந்து திரும்பிய பின்னர் சம்பந்தப்பட்ட டான்ஶ்ரீ கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட அந்த தொழிலதிபர் அண்டை நாட்டின் போன்சி முதலீட்டுத் திட்டம் தொடர்பான எம்பிஐ கறுப்பு பணமோசடி வழக்கைத் தீர்க்க முடியும் என்று கூறி, 25 மில்லியன் ரிங்கிட் கேட்டுள்ளார்.
கடந்த மார்ச் 21 முதல் ஏப்ரல் 5 வரை மேற்கொள்ளப்பட்ட ஓப் நார்தர்ன் ஸ்டார் சோதனை நடவடிக்கையின் போது இந்த விஷயம் வெளிவந்தது.
போலிசார் அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் கைதானதற்கான காரணத்தைக் கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கை முடிக்க ஒரு தொகையை செலுத்தியதாக அவர்கள் கூறினர்.
உடனே போலிசார் அவர்களுக்கு ஒரு புகாரை பதிவு செய்ய உத்தரவிட்டோம்.
அதில் டான்ஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபர் வழக்கைத் தீர்க்க முடியும் என்று கூறி 25 மில்லியன் ரிங்கிட் பணம் கேட்டது கண்டறியப்பட்டது.
விசாரணையில் சந்தேக நபர் 10 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றதாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முஹம்மது ஹஸ்புல்லா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm