நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரவு உணவு இறுதி உணவாக மாறியது: உணவகத்தில் துப்பாக்கிச்சூடு

பந்திங்:

பந்திங் பகுதியில் உள்ள உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஓர் ஆண் உயிரிழந்தார்.

இச் சம்பவம் இரவு சுமார் 10 மணியளவில், பாதிக்கப்பட்ட நபர் அந்த உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்தபோது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்கள் நுழைய முடியாதபடி கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தினர். 

சம்பவ இடத்தில் சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு துறை தலைவர், மூத்த உதவி ஆணையர் முஹம்மத் ஹட்டா சே டின், கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முஹம்மத் அக்மல்ரிசல் ராட்ஸி ஆகியோரும் உடனிருந்தனர்.

சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அவர் தற்போது தப்பியோடி உள்ளதாகவும், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset