நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சவுதி பயணம் பாதியில் ரத்து: பிரதமர் மோடி இந்தியா விரைவு

ஜித்தா:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா விரைகிறார். 

இன்று புதன்கிழமை அதிகாலை அவர் இந்தியா வந்தடைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
 
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட உள்ளதாகவும் புதன்கிழமை அதிகாலை அவர் இந்தியா வந்தடைவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset