நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி

மஞ்சோங்:

இந்திய இளைஞர்கள் தவறான வழியில் செல்கின்றனர் என்று சித்தரிப்பதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட்டின் இந்தியர் நலன்சார் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி இதனை கூறினார்.

மஞ்சோங் வீர பொழுதுபோக்குக் கழகத்தின் அறிமுக விருந்துபசரிப்பில் கலந்து கொண்டேன்.

இந்த விழாவில் மஞ்சோங், சித்தியவானை தவிர்த்து நாடு முழுவதிலும் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய இளைஞர்கள் ஒற்றுமையாக கூடியிருப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

அதே வேளையில் இவ்வட்டாரத்தில் உள்ள வசதிக் குறைந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று அவர்கள் உதவிப் பொருட்கள் வழங்கினர். இது தான் இந்திய இளைஞர்கள். 

மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்களுக்கு உதவ முன்வருவது இந்திய இளைஞர்கள் தான்.

ஆகவே இந்திய இளைஞர்களை தவறாக சித்திரப்பதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவே எனது வேண்டுகோள் என்று அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset