செய்திகள் மலேசியா
வடிகால் குழியில் விழுந்து மாணவன் மாண்டார்: இரு சகோதரர்களின் பயணம் சோகமாக முடிந்தது
தம்பின்:
நேற்று இரவு ஜாலான் பூங்கா தஞ்சூங்கில், இரண்டு சகோதரர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள், கட்டுமானத்தில் இருந்த வடிகால் குழாயுடன் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு சுமார் 10.10 மணியளவில் நடந்த இந்த விபத்தில், இடைநிலைப்பள்ளியில் படிவம் 2 பயிலும் இளைஞர், தனது 17 வயது அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் கோல இனாவிலுள்ள நண்பரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து வழுக்கி விலகி, சுமார் 10 மீட்டர் ஆழமுள்ள கட்டுமானத்தில் இருந்த வடிகால் குழியில் விழுந்ததாகத் தம்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சூப்பரிண்டெண்ட் அமிருத்தீன் சரிமான் தெரிவித்தார்.
“இந்த விபத்தில் யமஹா Y100 ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனும், அவரது 14 வயது தம்பியும் சிக்கினார்கள்.
“அவர்கள் இரவு உணவுக்குப் பிறகு, தம்பின் நகரிலிருந்து கோலா இனாவை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்,” என்றார் அவர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் கட்டுமானத்தில் இருந்த வடிகால் குழியுடன் மோதியது என்று மேலும் பேசிய அவர் கூறினார்.
“இதனால், பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் குழிக்குள் விழுந்துள்ளான். தீயணைப்புத் துறையின் உதவியுடன் அச்சிறுவன் மீட்கப்பட்டான்,” என்றார் அவர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவன் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதுடன், பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், தம்பின் போக்குவரத்து காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் (06-4412502) என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 2, 2026, 2:17 pm
காரில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்கள் கைது: போலிஸ்
February 2, 2026, 1:28 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகளில் மோதல்கள் முஸ்லிம்களின் வழி அல்ல: ஃபஹ்மி
February 2, 2026, 1:22 pm
குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டை ஒரு முக்கியமான தேசியப் பிரச்சினையாகக் கருத வேண்டும்: சார்லஸ்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 8:44 pm
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
February 1, 2026, 10:49 am
