செய்திகள் மலேசியா
முன்னாள் காதலியின் மீது கோபம்: பெட்ரோல் ஊற்றி, வீட்டில் தீ வைத்து தாக்கிய நபர் கைது
காஜாங்:
கடந்த வெள்ளிக்கிழமை, பண்டார் டெக்னோலோஜி, காஜாங்கில் உள்ள ஒரு வீட்டில், முன்னாள் காதலியின் மீது கோபம் கொண்ட ஆடவன் ஒருவன், அவளுக்கும் அவரது 80 வயது தாயாருக்கும் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தி, காருக்கு தீ வைத்ததோடு தன் முன்னாள் காதலி வளர்த்த கோழியையும் அரிவாளால் வெட்டியுளான்.
40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணை பிற்பகல் 3.20 மணியளவில் தாயார் எழுப்பியபோது, தனது முன்னாள் காதலன் வீட்டின் முன்புறத்தில் இருப்பதை அறிந்திருக்கிறார்.
அவன் அந்தப் பெண்ணின் புரோட்டான் சாகா காரைத் திறந்து, உள்ளிருந்த உடைமைகளை அகற்றி குப்பைகளைப் பைகளில் போட்டுள்ளான்.
இதைக் கண்ட பெண் கீழே ஓடி வந்தபோது, சில பொருட்கள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன.
அவனுடன் பேச முயன்றபோது, அந்த ஆடவன் இருவரின் மீதும் பெட்ரோல் ஊற்றி, தீப்பொறி காட்டி மிரட்டியுள்ளான்.
பின்னர், பெண்ணின் செல்லப்பிராணியான கோழியை தான் கொண்டு வந்த அரிவாளால் வெட்டியதுடன், காரின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான்.
இந்தச் சம்பவத்தில், பெண்ணின் தலை முடி உட்பட உடலின் சில பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு, அவன் பெண்ணின் மடிக்கணினியை எடுத்துச் சென்று சாலையோரத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். அக்கம்பக்கத்தினர் அதை மீட்டுக் கொண்டு வந்து கொடுத்தனர்.
தீ விபத்தால் கார் முழுமையாக சேதமடைந்ததுடன், வீட்டின் பொருட்களும் எரிக்கப்பட்டுள்ளன.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்தத் தாக்குதல் பதிவாகியுள்ளது.
அந்தப் பெண் ஒரு மாதத்திற்கு முன்பே அவனுடனான உறவை துண்டித்திருக்கிறார். அதன்பின், இந்தச் சம்பவம் வரை அவரை சந்திக்கவோ தொடர்புகொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரு பெண்களும் காஜாங் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக நபர் அதே நாளில் அருகிலுள்ள குடியிருப்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
விசாரணைக்காக அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 8:17 pm
அரச மன்னிப்பு அதிகாரம் என்பது அரசியல் பரிசு அல்லது தனிப்பட்ட அனுதாபம் அல்ல: பகாங் சுல்தான்
February 3, 2026, 8:08 pm
பயணியிடம் பாலியல் தொல்லை புரிந்த ஈ ஹெய்லிங் ஓட்டுநரின் உரிமம் உடனடியாக ரத்து: அந்தோனி லோக்
February 3, 2026, 6:03 pm
தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், சிலாங்கூர் மாநிலத்திற்குச் செல்லும் பேருந்தில் கைது
February 3, 2026, 3:24 pm
நகராட்சி தேர்தல் அச்சுறுத்தல் அல்ல, மக்களின் அதிகாரம்: அம்னோ இளைஞர் பிரிவின் எதிர்ப்புக்கு டாப்ஸி பதில்
February 3, 2026, 2:54 pm
மத சகிப்புத்தன்மை, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு ஆகியவை நல்லிணக்கத்தின் அடிப்படையாகும்: ஜாஹித் ஹமிடி
February 3, 2026, 11:14 am
வடிகால் குழியில் விழுந்து மாணவன் மாண்டார்: இரு சகோதரர்களின் பயணம் சோகமாக முடிந்தது
February 2, 2026, 2:17 pm
