நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனவாதத்தை தூண்டும் விவகாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்; ஒற்றுமையே மலேசியர்களின் வலிமை: டத்தோஸ்ரீ ஜம்ரி

மஞ்சோங்:

நாட்டில் இனவாதத்தை தூண்டும் விவகாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் காலக் காலக் காலக் காலக் காலக் காலக் கூறினார்.

மஞ்சோங் வீர பொழுதுபோக்குக் கழகத்தின் அறிமுக விருந்துபசரிப்பில் கலந்து கொண்டேன்.

துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி, கழகத்தின் தலைவர் ராஜசேகரன் அழைப்பின் பேரில் இங்கு வந்தேன்.

இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. காரணம் பல்லின மக்கள் ஒரே இடத்தில் திரண்டுள்ளனர்.

இது தான் மலேசியர்களின் ஒற்றுமை. இதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.

இவ்விழாவை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

மேலும் மஞ்சோங் வீர பொழுதுபோக்குக் கழகம் முறையாக செயல்பட வேண்டும். குறிப்பாக உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு உதவ வேண்டும். இது தான் எனது வேண்டுகோள்.

அதே வேளையில் ஒற்றுமையாக இருக்கும் மலேசியர்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

குறிப்பாக சமூக ஊடகங்களில் அதிகமாக இதுபோன்ற இனவாத சம்பவங்கள் நடக்கிறது.

இதுபோன்ற விவகாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஒற்றுமை தான் மலேசியர்கள் வலிமை.

இவ்விவகாரத்தில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset