நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் 3,000 இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் கிட்டத்த 3,000 இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பார்கள்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் ஆயிர் கூனிங்  சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில்   டாக்டர் முகமது யுஸ்ரி பக்கீர் போட்டியிடுகிறார்.

அவரை இத்தொகுதியில் உள்ள கிட்டத்தட்ட 3,000 இந்திய வாக்காளர்கள் ஆதரிப்பார்கள்.

தாபா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள தேசிய முன்னணி தேர்தல் கேந்திரம் தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, 

அனைத்து இன மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் உழைத்து வந்தது தான் இதற்குக் காரணம்.

வேலை செய்யு வரை நாங்கள் தேர்தல் காலம் காத்திருக்க மாட்டோம்.

திடீர் வெள்ளம், சேதமடைந்த சாலைகள் அல்லது பள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால், நாங்கள் களத்தில் இறங்குவோம்.

அதைத் தவிர, கட்சி தேர்தல் கேந்திரங்களுக்கிடையேயான ஒற்றுமை உணர்வு தான் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி தேசிய முன்னணி கோட்டையாகவே உள்ளது.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மஇகா, அம்னோ, மசீசா ஆகிய மூன்று வேட்பாளர்களையும் மக்கள் வெற்றியடைய செய்தனர்.

இது இந்திய, மலாய், சீன சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமை உணர்வு நிரூபிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வரும் இடைத் தேர்தலிலும் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset