நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது முஃபாகத் நேஷனலின் உணர்வு நிலைத்திருக்கும்: சனுசி

அலோர்ஸ்டார்:

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது முஃபாகத் நேஷனலின் உணர்வு நிலைத்திருக்கும்.

கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மத் சனுசி இதனை வலியுறுத்தினார்.

முஃபாகத் நேஷனல் உணர்வை மீண்டும் உயிர்ப்பிப்பதில் பாஸ் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும்.

மேலும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அம்னோ உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஒன்றிணைந்து உம்மாவின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்.

கட்சியின் போராட்டத்தில் சேர விரும்பும் அம்னோ உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பாஸ் எப்போதும் திறந்திருக்கும்.

நாம் அம்னோ நண்பர்களை அழைப்போம். பாஸ் கட்சியில் எங்களுடன் இருக்க விரும்பும் அம்னோ மக்களை நாங்கள் வரவேற்கிறோம்.

பாஸ் மத்திய தேர்தல்கள் இயக்குநர்  டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முஹம்மது நோர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset