நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன

புதுடெல்லி: 

யுனெஸ்கோவின் உலக நினைவுப் பதிவேட்டில் அரிய கையெழுத்துப் பிரதிகள் கொண்ட பகவத் கீதையும் பரத முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரமும் சோ்க்கப்பட்டுள்ளன.

உலக அளவில் கலாசார-பாரம்பரிய தொன்மைமிக்க ஆவணங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, உலக நினைவுப் பதிவேட்டைக் கடந்த 1993ஆம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ உருவாக்கியது. கையால் எழுதப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த நூல்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை அப்பதிவேட்டில் இணைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து புதிதாக 74 பாரம்பரிய ஆவணங்கள் அதில் சோ்க்கப்பட்டன.

இதன்மூலம், ‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் இருக்கும் மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 570ஆக உயா்ந்துள்ளது.

“கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தை மகராஷ்டிராவில் இருக்கும் பண்டாா்கா் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம் பாதுகாக்கிறது.

அந்நூல் கந்தா்வ வேதம், நாட்டிய வேதம் எனவும் அறியப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset