
செய்திகள் மலேசியா
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தாய்லாந்துக்கான அதிகாரப்பூர்வ பயணம், அண்டை நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.
இது மியான்மரில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
தாய்லாந்து பிரதமர் பேதோங்டர்ன் ஷினவத்ராவுடனான சந்திப்பில், வர்த்தகம், முதலீடு மற்றும் எல்லைப் பகுதிகளின் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டதாக அன்வார் கூறினார்.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், முதலீடு மற்றும் பிராந்திய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஆற்றலை ஆராய்வதற்கான வழிகளையும் திறந்துள்ளன என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
ஆசியான் 2025 தலைவராக மலேசியா, ஆசியான் கட்டமைப்பின் கீழ் மியான்மர் மக்களுக்கு நிலையான மற்றும் கண்ணியமான தீர்வுகளைக் கண்டறிவதில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று அவர் கூறினார்.
மலேசியாவை பிராந்தியத்தில் விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றும் குறிக்கோளுக்கு இணங்க, உயர்தர முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தாய்லாந்தைச் சேர்ந்த முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் தலைவர்களுடன் அன்வார் சந்திப்புகளையும் நடத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm