செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் சந்தைகளில் KPDN அதிகாரிகள் சோதனை; வியாபாரிகள் விலைப் பட்டியலை அவசரமாக பொருத்தினர்
கோலாலம்பூர்:
உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) அதிகாரிகளைக் கண்டதும் சில வியாபாரிகள் உடனடியாக விலைப் பட்டியலை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
கோலாலம்பூர் பொது சந்தை, புடு சந்தை பகுதிகளில் பரிசோதனை நடத்தப்பட்டதில் இவ்வாறு நடந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடவடிக்கையின் போது பெரும்பாலான கடைகள் விலை குறியீடுகளை வெளிப்படுத்தியிருந்தாலும், சிலர் இன்னும் குறியீடு, அளவீட்டு கருவிகள் தொடர்பான விதிகளைப் பின்பற்றவில்லை. அதே நேரத்தில், சிலர் தவறான காரணத்திற்காக அளவீட்டு கருவிகளை மறைத்து வைக்க முயன்றனர்.
KPDN கோலாலம்பூர் இயக்குநர் சப்ரீ சேமான், “நடவடிக்கையின் போது மொத்தம் 26 வியாபாரிகளுக்கு RM5,800 மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நடவடிக்கையில், கோலாலம்பூர் பொது சந்தையில் 220 வியாபாரிகள், புடு சந்தையில் 280 வியாபாரிகள் பரிசோதிக்கப்பட்டனர்.”
விலை குறியீடு வெளிப்படுத்தப்படாமை, கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு பிங்க் விலை குறியீடு வைக்காமை, சரிபார்க்கப்படாத அளவீட்டு கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகிய தவறுகளை வியாபாரிகள் மேற்கொண்டதாகக் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை அய்டில்ஃபித்ரி பருவ விலை உச்ச வரம்பு திட்டம் (SHMMP) உடன் இணைந்து நடந்து வருகிறது, 19 பிப்ரவரி முதல் மொத்தம் 2,000 வியாபாரி நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சில வியாபாரிகள் விலைப் பட்டியலை வெளிப்படுத்தாமையால் வாடிக்கையாளர்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இது KPDNக்குப் பெரிய கவனமாகும். மேலும், சரிபார்க்கப்படாத அல்லது காலாவதியான அளவீட்டு கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.”
மேலும், i-Payment குழு உடன் இணைந்து, நடவடிக்கையின் போது வியாபாரிகள் அபராதத்தை அந்த இடத்திலேயே செலுத்தக்கூடிய வசதி வழங்கப்பட்டது.
KPDN கோலாலம்பூர் வாடிக்கையாளர்களின் நலனையும் பாதுகாப்பையும், வியாபாரிகளின் ஒழுங்கையும் உறுதி செய்வதில் தீவிரமாக செயல்பட இருப்பதாக சப்ரீச் சேமான் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 3:05 pm
விமான நிலையத்தில் 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஆடவர் கைது
March 17, 2026, 3:03 pm
மனநல பாதிப்பால் நேர்ந்த விபரீதம்: மலேசியப் பெண் காவலரைத் தாக்கிய வெளிநாட்டுப் பெண் கைது
March 17, 2026, 3:01 pm
தொழிலாளர் பாதுகாப்புப் புறக்கணிப்பு: பினாங்கு தொழிற்சாலைகளுக்கு 70,000 ரிங்கிட் அபராதம்
March 17, 2026, 1:24 pm
தேசியக் கூட்டணியில் மஇகா இணைந்ததை டத்தோஶ்ரீ சரவணன் நிராகரித்தார்
March 17, 2026, 12:57 pm
தாய்லாந்திலிருந்து போலி துப்பாக்கிகள் கடத்தல்: பொறியாளர் உட்பட இருவர் மலேசிய எல்லையில் கைது
March 17, 2026, 12:19 pm
மஇகா இப்போது தேசியக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளது: தக்கியூடின்
March 17, 2026, 12:18 pm
