நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ மாநகரில் தமிழ் திரைப்படம் தயாராகிறது

ஈப்போ:

தமிழ் திரைப்படத்தை தயாரிக்கும் நோக்கில் தமிழகத்தில் இருந்து சினிமா படக் குழு ஈப்போ வந்தடைந்துள்ளது.

இந்த படத்திற்கான பூஜை ஈப்போவில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று சிறப்புடன் நடைபெற்றது.

ஈப்போவில் 70 விழுக்காடு காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தின் கதாநாயகனாக தமிழகத்தைச் சேர்ந்த ரோபட் மாஸ்டர்  நடிக்கிறார்.

அதில்  கதாநாயகியாக மலேசியாவைச் சேர்ந்த நடியா சாங்  நடிக்க உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் யுவராஜன் பாலையா கூறினார்.

இப்படத்தில் அதிகமான உள்ளூர் கலைஞர்கள் இடம் பெற உள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்தார்.

ஈப்போவில் மட்டில் மட்டும் 2  மாதங்கள் அதற்கான படபிடிப்பு பணிகள் மாநில அரசாங்க ஆதரவுடன் நடைபெற உள்ளது.

ஈப்போவில் நடைபெற்ற பட பூஜையில் கலந்துக கொண்ட மாநில ஆட்சிக் குழ உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் வாழத்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அதில் பேசிய டத்தோ சிவநேசன் மலேசியாவில்  பல படங்கள தயாரிக்கப்படுகிறது.

இதன் வழி் சுற்றுப் பயணிகள் அதிமானோர் வருவதற்குறிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset