
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்புச் சந்தை செலயாங்கில் நடைபெறுகிறது; 4000 பேருக்கு வேலை வாய்ப்புகள்: பாப்பாராயுடு
செலயாங்:
சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்புச் சந்தை இன்று மிகப்பெரிய அளவில் செலாயாங், டேவான் ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டிற்கான முதல் நிகழ்வாக விளங்கும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் ரெடிகேர், கார்ஸம், செங்ஹெங், 99 ஸீபீட்மார்ட், சப்வே உள்ளிட்ட நிறுவனங்கள் 4,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இதனை தெரிவித்தார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் நேர்முகப் பேட்டி, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசகச் சேவை, அரசு துறைகளின் கண்காட்சி, ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை, இலவச மருத்துவ பரிசோதனை ஆகிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் ஆண்டு இறுதிவரை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் கைதிகள் உட்பட 40,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவதாக அவர் கூறினார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சேவை, உற்பத்தி, சந்தை, சுகாதாரம், சுற்றுலா, உபசரனை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி சிறப்பு வருகை தந்து இந்த வேலை வாய்ப்பு சந்தையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 12:29 pm
சிலாங்கூர் போலீஸ்படையின் இடைக்காலத் தலைவராக ஜைனி நியமனம்
July 18, 2025, 11:42 am
‘Turun Anwar’ பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ளுங்கள்: முஹம்மத் உசுஃப் ஜான்
July 18, 2025, 11:42 am
கிளந்தானில் அரசு ஊழியர்கள் உட்பட 25 பேர் கையூட்டு வழக்கில் கைது
July 18, 2025, 11:37 am
சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள் விவகாரம் கைவிடப்பட்ட சம்பவம் அல்ல: போலிஸ்
July 18, 2025, 11:30 am
அன்வாருக்கு எதிரான' பேரணி: 15,000 பேர் பங்கேற்கலாம்; போலீசார் தயார்
July 18, 2025, 11:27 am
சிலாங்கூர் போலீஸ் தலைவராக ஹூசேன் ஓமாரின் சேவை அளப்பரியது: அமிருடின் ஷாரி
July 18, 2025, 11:15 am
காணாமல் போன 17 வயது இளம்பெண் கோலாலம்பூரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
July 18, 2025, 11:14 am