செய்திகள் வணிகம்
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
கோலாலம்பூர்:
இவ்வாண்டு எஹ்சான் வர்த்தக குழுமத்திற்கு மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமையும் என்று தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
எஹ்சான் வர்த்தகக் குழுமத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பி இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
500க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
எஹ்சான் வர்த்தக குழுமத்தில் வர்த்தக பங்காளிகள், சொத்துடமை நிறுவனங்கள், வங்கிகளின் அதிகாரிகள், விற்பனை முகவர்கள், பணியாளர்கள் என பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு எஹ்சான் வர்த்தகக் குழுமம் கடந்த ஒரு மாதமாக பல சமூக கடப்பாடு திட்டங்களை மேற்கொண்டது.
குறிப்பாக நாடு முழுவதும் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பும் சிறப்பாக நடைபெற்றது.
இனி எஹ்சான் வர்த்தகக் குழுமம் அடித்து வர்த்தகத்தில் முழு கவனம் செலுத்தவுள்ளது.
தற்போது ஜொகூர், நீலாய் ஆகிய பகுதிகளில் எஹ்சான் வர்த்தக குழுமத்தின் வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அத்திட்டங்கள் வெற்றிகரமாக முடிவு பெறும்.
அதே வேளையில் இவ்வாண்டும் மேலும் பல திட்டங்களின் வாயிலாக எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமையும் என்று டத்தோ பிவி அப்துல் ஹமித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
