
செய்திகள் மலேசியா
கெஅடிலான் கட்சித் தேர்தலில் மர்ம நபர்கள் யாரும் தலையிடவில்லை: டத்தோஶ்ரீ ஜலேஹா
புத்ராஜெயா:
கெஅடிலான் கட்சித் தேர்தலில் மர்ம நபர்கள் யாரும் தலையிடவில்லை.
இது தொடர்பான குற்றச்சாட்டை தாம் முழுமையாக மறுப்பதாக தேர்தல் குழு தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா கூறினார்.
நடந்து வரும் கட்சித் தேர்தல் முடிவுகளில் மர்ம நபர்கள் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.
இந்த தேர்தல் செயல்முறை தொடர்பாக எழுப்பப்படும் ஒவ்வொரு பிரச்சினையையும் குழு கவனிக்கிறது.
கேலும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் சந்தேகங்கள் குறித்து புகார் அளிக்க குழு வரவேற்கிறது.
கெஅடிலான் தேர்தலில் இணைய வாக்களிப்பு முறையை உருவாக்கிய நிறுவனத்துடன் அந்தக் குழு நேரடியாகப் பணியாற்றியதாகக் கூறினார்.
வாக்களிப்பு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆய்வு செய்யும் ஒரு தணிக்கை நிறுவனத்தால் வாக்களிப்பு செயல்முறை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜலேஹா மேலும் கூறினார்.
எனவே, தேர்தல் செயல்முறை முழுவதும் எனக்குத் தெரிந்தவரை, சில கட்சிகள் மர்ம நபர்கள் என்று கூறுவதை நான் காணவில்லை.
இதை நான் உறுதியாக கூறுகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 5:44 pm
மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராகிறார் தெங்கு ஜஃப்ருல்: டத்தோ கென்னி கோ
May 6, 2025, 4:44 pm
மலேசியாவிற்கு அதிக உள்நாட்டு பொருளாதார மீள்தன்மை தேவை: பிரதமர்
May 6, 2025, 4:44 pm
ஃபாமிலா காணாமல் போன வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது: ஐஜிபி
May 6, 2025, 4:19 pm