நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு திட்டம் 82% நிறைவடைந்துள்ளது: அந்தோனி லோக்

கோலாலம்பூர்: 

கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் வழியாகச் செல்லும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு திட்டம், (ECRL) தற்போது வரை 82% நிறைவடைந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

மாரான், பகாங் முதல் கோத்தா பாரு, கிளந்தான் வரையிலான பிரதான பாதையை உள்ளடக்கிய 400 கி.மீ. ரயில் தண்டவாளம் அமைப்பதற்கான பணி நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். 

இது திட்டமிட்டதை விட இரண்டரை மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டது.

எனவே, மாரானிலிருந்து பெந்தோங் வரையிலான அடுத்த 100 கி.மீ. தூரத்திற்கான தண்டவாள அமைக்கும் பணி இந்த மாதம் தொடங்கும் என்றார் அவர். 

ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.

ECRL நிலையங்களின் கட்டுமானப் பணிகள் எதிர்ப்பார்க்கப்பட்டதை விட சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் செயல்பாடு தொடங்குவதற்காக அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் லோக் கூறினார்.

திட்டத்தின் செயல்பாட்டு மற்றும் மேலாண்மை அம்சங்களை மேற்பார்வையிட ECRL செயல்பாடுகள் Sdn Bhd நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset