நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிற்றுண்டி சாலையில் தொம்யாம் நாசி கோரேங் சாப்பிட்ட 43 மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்பு: சிவநேசன்

ஈப்போ:

சிற்றுண்டி சாலையில் தொம்யாம் நாசி கோரேங் சாப்பிட்ட 43 மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரா மாநில மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் இதனை கூறினார்.

கடந்த மாதம் தெலுக் இந்தானில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களின் இந்நிலைக்கு தொம்மியாம் நாசி கோரீங்  உணவு தான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

சான் மின் சீன இடை நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த  ஏப்ரல் 21ஆம் தேதி  பள்ளி சிற்றுண்டி சாலையில் வழங்கப்பட்ட உணவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 22 ஆம் தேதி இரண்டு மாணவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதால் நச்சுணவு  பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹிலிர் பேரா மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset