நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே 18ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் பியோன் கல்வி உபகாரச் சம்பள விளக்கக் கூட்டம்: விக்னேஷ்

அம்பாங்:

பியோன் கல்வி உபகாரச் சம்பள விளக்கக் கூட்டம் மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் நடத்தப்படவுள்ளது.

மலேசிய பியோன் கல்வி நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் விக்னேஷ் கிருஷ்ண குமார் இதனை தெரிவித்தார்.

மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறையில் உயர் கல்வியைப் பயில விரும்பும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டலை வழங்க வேண்டும் என்பதே பியோன் மலேசியாவின் முதன்லை இலக்காகும்.

இதன் அடிப்படையில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக பியோன் பல நடவடிக்கைகளை பியோன் மலேசியா மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கல்வி உபகாரச் சம்பள விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விளக்கக் கூட்டம் வரும் மே 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மலாயா பல்கலைக்கழகத்தின் ஶ்ரீ செமாராக் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த முறை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்துக் கொண்டனர்.

இம்முறை இன்னும் அதிகமான மாணவர்கள் இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் மருத்துவம், அது சார்ந்த துறைகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் குறித்து இங்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் இங்கு முகாமிட்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உரிய வழிகாட்டல்களை வழங்கவுள்ளன.

ஆக மொத்தத்தில் இந்த வழிக்காட்டல் கருத்தரங்கு அவர்களுக்கு பெரும் பயனாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

ஆகவே மாணவர்களும் பெற்றோர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு  விக்னேஷ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset