நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராகிறார் தெங்கு ஜஃப்ருல்: டத்தோ கென்னி கோ 

கோலாலம்பூர்:

2025–2029 -ஆம் ஆண்டுக்கான மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவர் பதவி போட்டிக்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் மட்டுமே இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோ தெரிவித்தார். 

தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அவர் மட்டுமே தாக்கல் செய்துள்ள நிலையில், சனிக்கிழமை தேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவரது தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் பதவி உட்பட மற்ற பதவிக்குப் போட்டியிட நினைக்கும் வேட்பாளர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் தேர்தல் நாள் வரை திறந்திருக்கும் என்றும் கென்னி தெரிவித்தார். 

தற்போது தலைவர் பதவிக்கு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மற்ற பதவிகளுக்கு இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றும் கென்னி கோ தெரிவித்தார். 

முன்னதாக, மார்ச் மாதத்தில், பிஏஎம் மன்றம் உறுப்பினர்களில் பெரும்பாலோர் தெங்கு ஜஃப்ருலைப் புதிய தலைவராக நியமிக்க ஒருமித்த ஆதரவு  தெரிவித்ததாக மலேசியப் பூப்பந்து சங்கத்தின் இடைக்காலத் தலைவர் டத்தோ வி சுப்பிரமணியம் அறிவித்தார்.

சங்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு வலுவான மற்றும் நிலையான தலைமையின் அவசியத்தை இது பிரதிபலிப்பதாக சுப்பிரமணியம் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset