நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை இலக்கவியலாக்கும் செயல்முறைகளில் இன்னும் பின்தங்கியுள்ளன: கோபிந்த் சிங் 

கோலாலம்பூர்:

மலேசிய சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை செயல்முறைகளில் விவகாரங்களில் இன்னுமும் பின்தங்கியுள்ளன.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

எஸ்எம்இ எனப்படும்  சிறு, நடுத்தர நிறுவனங்கள் இலக்கவியல் விவகாரத்தில்  இன்னும் பெரிய நிறுவனங்களை விட பின்தங்கியுள்ளன.

இந்தப் பிரச்சினையைத் தீர்வு காண சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளில் இலக்கவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்த உதவும் வகையில்,

மலேசியா இலக்கவியல் பொருளாதாரக் கழகத்தால் சமீபத்தில் தொடங்கப்பட்ட வணிக இலக்கவியமயமாக்கலில்  முயற்சி போன்ற முயற்சிகள் மூலம் அமைச்சு கடுமையாகச் செயல்பட்டு வருகிறது.

மடானி அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இலக்கவியல் தொடர்பான திட்டங்களுக்கு  50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட், அலிபாபா கிளவுட் போன்ற மலேசியாவை தளமாகக் கொண்ட உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.

சிதோஸ்  சிறு, நடுத்தர வணிக தின உரையில் அமைச்சர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset