நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து இன மக்களின் தலைவர் எனும் டான்ஶ்ரீ மொஹைதின் கூறியதை அரசியலாக்க வேண்டாம்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

அனைத்து இன மக்களின் தலைவர் எனும் டான்ஶ்ரீ மொஹைதின் கூறியதை அரசியலாக்க வேண்டாம்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

தேசியக் கூட்டணியின் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் அண்மையில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார்.

அப்போது  தான் இப்போது அனைத்து மலேசியர்களின் தலைவராக விளங்குகிறேன்.

மலாய் அடையாளத்தின் முதன்மை குறித்த அவரது பழைய கருத்துக்கள் இனி பொருந்தாது என கூறினார்.

டான்ஶ்ரீ மொஹைதினின் பேச்சு தற்போது அரசியலாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக  அதிகாரத்திற்காக ஒருவர் மாற முடியும் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது என சாடியுள்ளனர்.

நாட்டில் உள்ள பல அரசியல் தலைவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் ஒன்று பேசுகிறார். அதிகாரத்திற்கு வந்த பின் மாறி விடுகின்றனர்.

இதனை அனைவரும் பார்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

ஆனால் டான்ஶ்ரீ மொஹைதின் பேசியதை மட்டும் அரசியலாக்குவதன் நோக்கம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.

நாட்டின் வாழும் அனைத்து இன மக்களின் நல்வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும் என்பது தான் தேசிய கூட்டணியின் முதன்மை இலக்காக உள்ளது.

ஆக இவ்விவகாரத்தை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset