நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபாமிலா காணாமல் போன வழக்கை விசாரிக்க  சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது: ஐஜிபி

கோலாலம்பூர்:

ஃபாமிலா காணாமல் போன வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

கடந்த  ஏப்ரல் 9 ஆம் தேதி எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது மூன்று நபர்களால் ஃபாமிலா லிங் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

காணாமல் போன ஃபாமிலா வழக்கை விசாரிக்க போலிஸ்படை ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட குழுவை அமைக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணையில் சமீபத்திய முன்னேற்றங்களைக் கண்டறிய இன்றிரவு கூட்டத்திற்கு நானே தனிப்பட்ட முறையில் தலைமை தாங்குவேன் என்று அவர் கூறினார்.

வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலங்களை வழங்க 16 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் ஃபாமிலாவைக் கடத்தியதாக நம்பப்படும் நபர் போலீஸ் சீருடை, வேட்டி அணிந்திருந்ததாகக் கூறிய மின்-ஹெய்லிங் ஓட்டுநரின் அறிக்கையையும் தனது கட்சி இன்னும் விசாரித்து வருவதாக டான்ஶ்ரீ ரஸாருடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset