நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனையில் பள்ளி திட்டத்தைப் பூர்வக்குடி மருத்துவமனைகளில் விரிவுப்படுத்தப்படும்: ஃபட்லினா சிடேக் 

கோலாலம்பூர்:

மருத்துவமனையில் பள்ளி திட்டத்தை (SDH) இவ்வாண்டு இறுதிக்குள் கோம்பாக்கில் உள்ள பூர்வக்குடி மருத்துவமனையில்   விரிவுப்படுத்த கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

பூர்வக்குடி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர்களின் கல்வியில் பின் தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஃபட்லினா சிடேக் கூறினார். 

தற்போது கல்வி அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.  

இன்றுவரை, 19 மருத்துவமனையில் 50,000 மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.

இந்தத் திட்டத்தின் உதவியோடு குறிப்பாக கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் 91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் 
என்று செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையில் (HRC) நடைபெற்ற SDH திட்டத்தைச் செயல்படுத்துவதில் கல்வி அமைச்சகத்திற்கும் சுகாதார அமைச்சகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவிற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது சுகாதார அமைச்சகத்தின் கீழுள்ள 16 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset