நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவியின் இறுதியஞ்சலியின் போது  முகநூலில் இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்திய ஆடவர்: ஜாக்கிம் புகார் 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவியின் இறுதியஞ்சலியின் போது முகநூலில் ஆடவர் ஒருவர் இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறை JAKIM, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்தில் புகார் அளித்துள்ளது 

பொறுப்பற்ற முறையில் ஆடவர் ஒருவர் கருத்து பதிவேற்றம் செய்திருப்பது கண்டிக்கக்கூடிய செயலாகும். 

சம்பந்தப்பட்ட அமலாக்க துறை தரப்பு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த புகார் MCMC யிடம் செய்வதாக ஜாக்கிம் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுடின் சுஹைமி கூறினார். 

முஸ்லிம் மக்களின் உணர்வுக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் மரியாதை கெடுக்கும் வகையில் இந்த கருத்து பதிவேற்றம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இதனால் ஆடவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாக்கிம் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset