நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேச்சு சுதந்திரம் போய்விட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

நாட்டில் பேச்சு சுதந்திரம் போய்விட்டதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

துன் மகாதீர் மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை இழிவாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். 

இந்த முறை அவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இணையான சீர்திருத்த முழக்கத்தை சாடியுள்ளார்.

குறிப்பாக நாட்டில் தற்போது பேச்சு சுதந்திரம் போய்விட்டதாகக் கூறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சின்னதாக எந்தத் தவறு நடந்தாலும் போலிஸ் துறையினரால் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

இப்போது நாம் 3ஆர் எனப்படும் மலாய் மன்னர்கள், மதம், இனம் பற்றிப் பேச முடியாது.  ஆனால் எழும் பிரச்சனைகள் அனைத்தும் 3ஆர் தொடர்பானதாக உள்ளது.

அவர்கள் மலாய்க்காரர்கள்தான். அவர்களால் மலாய்க்காரர்களைப் பற்றிப் பேச முடியாது. அவர்கள் முஸ்லிம்கள்தான், அவர்களால் இஸ்லாத்தைப் பற்றிப் பேச முடியாது.

அவர்கள் ராஜாவைப் பற்றிப் பேச விரும்புகிறார்கள். ஆனால் பேச முடியாது.

கூடுதல் தகவலைப் பற்றிப் பேசாதீர்கள். விசில் அடிக்காதீர்கள். நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். 

இதையும் அதையும் அரசியலாக்காதீர்கள் என்று அவர் இன்று மாலை சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் கூறினார்.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இந்த பயத்தை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் பேசினால், கயிறு இல்லாமல் தூக்கிலிடப்படுவார்கள். அதனால்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். 

போலிஸ் துறையினரால் விசாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் காவலில் வைக்கப்படலாம். 

ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அல்ல. பல மாதங்கள் நீட்டிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset