நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் முதலீடு செய்ய தாய்லாந்து கூட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு

பேங்காக்:

மலேசியாவில் முதலீடு செய்ய தாய்லாந்து கூட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார்.

பாங்காக்கில் வணிகப் பிரமுகர்களுடனான சந்திப்பில் பிரதமர் அன்வார், மலேசியாவில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.

மலேசியாவுடனான சாத்தியமான முதலீடு, மூலோபாய ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக, தாய்லாந்தின் மூன்று முன்னணி கூட்டு நிறுவனங்களான டிசிசி குழுமம், மைனர் இன்டர்நேஷனல் குழுமம், பிடிடி குழுமத்தின் பிரதிநிதிகளை சந்தித்ததாக அவர் கூறினார்.

தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு மலேசியா கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.

குறிப்பாக மின்சாரம், மின்னணுவியல், ஆட்டோமொடிவ் (மின்சார வாகனங்கள்),  ரசாயனங்கள் போன்ற அதிக மதிப்பு கூட்டப்பட்ட துறைகளில் வாய்ப்புகள் உள்ளது.

தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீட்டு முயற்சிகளை நான் வரவேற்கிறேன்.

மேலும் தரமான முதலீட்டை எளிதாக்குவதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset