நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்டிக்சன் அருகே பயங்கர சாலை விபத்து: கல்லூரி மாணவர் பலி, ஐவர் படுகாயம் 

போர்டிக்சன்: 

சிரம்பான் - போர்டிக்சன் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 28.3இல் ஆறு மோட்டார் சைக்கிள்களை உட்படுத்திய பயங்கர சாலை விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் பலியான வேளையில் ஐவர் படுகாயமடைந்தனர். 

ஆறு பேரில் ஒருவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே பலியான வேளையில் மற்றவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்காகினர் என்று போர்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன் மஸ்லான் உடின் கூறினார் 

ஒரு மோட்டார் சைக்கிள் மற்ற மோட்டார் சைக்கிளோடு மோதியதால் வேக கட்டுப்பாட்டை இழந்த இதர மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகின என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது 

1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்‌ஷன் 41(1) இன் கீழ் இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை செய்தவாக மஸ்லான் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset