
செய்திகள் மலேசியா
தைவானில் லாபகரமான முதலீட்டு திட்டத்தால் கவரப்பட்ட மலேசியப் பெண் கிட்டத்தட்ட 600,000 ரிங்கிட்டை இழந்தார்: போலிஸ்
நீலாய்:
கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தைவானில் உள்ள ஒரு முதலீட்டுத் திட்டத்தின் லாபகரமான வருமானத்திற்கு மயங்கிய மலேசியப் பெண் 579,110 ரிங்கிட்டை இழந்தார்.
நீலாய் மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாஷிம் இதனை தெரிவித்தார்
சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, முதலீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட விண்ணப்பம் அணுக முடியாததாகி விட்டது.
மேலும் பாதிக்கப்பட்டவர் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்கத் தவறிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.
நேற்று காலை பாதிக்கப்பட்டவரிடமிருந்து போலிஸ் புகார் பெறப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு 50 வயது, அவர் நீலாய்யில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி மனிதவள மேலாளராகப் பணிபுரிகிறார்.
பாதிக்கப்பட்டவர் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி தைவானில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இணைய முதலீட்டுத் திட்டத்தை வழங்கிய ஒரு நபருடன் தான் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கட்டம் கட்டமாக பணம் செலுத்தி ஏமார்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலிஸ் விசாரணைகளை நடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am