நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சின் சியூ ஆசிரியர் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கையா?: கல்வியாளர் வேதனை

கோலாலம்பூர்:

சின் சியூ ஆசிரியர் கைது செய்யப்பட்டது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று கல்வியாளர் பேராசிரியர் டாக்டர் தாஜுதீன் முஹம்மத் ரஸ்தி சாடினார்.

சம்பந்தப்பட்ட நாளிதழின் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எனக்கு  ஏமாற்றமளிக்கிறது.

மேலும் நான் மலேசியராக இருப்பதற்கு மிகவும் வெட்கப்படுகிறேன்.

நமது நாடு ஒரு தோல்வியுற்ற நாடாக மாறும் விளிம்பில் உள்ளது.  ஏற்கெனவே முடிவில்லாத படுகுழியில் விழுந்துவிட்டது என்ற எனது நீண்டகால நம்பிக்கையை இந்த சம்பவம் வலுப்படுத்தியுள்ளது.

பிறை சின்னம் இல்லாமல் தேசியக் கொடி படத்தை வெளியிட்டதில் ஏற்பட்ட தற்செயலான தவறுக்குப் பிறகு,

சீன மொழி செய்தித்தாள் அதன் இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்த நடவடிக்கையுடன் நான் உடன்படவில்லை.

மன்னிப்பு கேட்டு, தவறை சரிசெய்து, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்ய உறுதியளித்த சின் சியூவின் நடவடிக்கைகள் போதுமானதாகக் கருதப்பட வேண்டும்.

எந்தவொரு தவறுகளையும் அனுமதிக்காத ஒரு குடும்பமாக நாம் எப்படி இருக்க முடியும்? கற்றுக்கொள்ள இடமளிக்காத, சுய திருத்தத்திற்கான கருணை இல்லாத ஒரு குடும்பமாகவோ அல்லது நாடாகவோ நாம் எப்படி இருக்க முடியும்?.

எந்த மாதிரியான குடும்பமும், நிறுவனமும் அல்லது நாடும் தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது தெய்வீக இயல்பு என்ற கொள்கையைக் கைவிடுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset