நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியன்மாரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும்: மியன்மார் அரசாங்கத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் 

பெங்கொக்: 

மியன்மார் நாட்டில் நடைபெற்று வரும் உள்ளூர் கலவரத்தால் அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், அந்நாட்டில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பலி எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமானது 

இதனால் மியன்மாரில் நடப்பில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் அந்நாட்டு அரசு நீட்டிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதை இது உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

மியன்மார் இராணுவ தலைவர் மின் அங் ஹிலயிங் உடன் அன்வார் இப்ராஹிம் சந்திப்பு நடத்திய நிலையில் அந்நாட்டின் நிழல் அரசாங்க பிரதிநிதிகளுடனும் அன்வார் பேச்சு வார்த்தை நடத்தினார். 

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தற்போதும் ஆசியான் உறுப்பியத்தின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுள்ளார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset