நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லுக்குட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை இடம் மாற்றம் செய்ய நெகிரி செம்பிலான் மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும்: கண்ணன்

லுக்குட்:

லுக்குட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை இடம் மாற்றம் செய்ய நெகிரி செம்பிலான் மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும்.

அவ்வாலயத்தின் செயலாளர் கண்ணன் இதனை வலியுறுத்தினார்.

லுக்குட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 123 ஆண்டுகள் வரலாற்றை கொண்டதாகும்.

இந்த ஆலயம் அமைந்துள்ள அமைந்துள்ள நிலம் புக்கிட் பாலோங் தோட்டமாக இருந்தது.

தோட்ட துண்டாடல்களுக்கு பின் இவ்வாலயம் இங்கு செயல்பட்டு வருகிறது.

முன்னாள் நிர்வாகம் ஆலயத்தை புதுபித்தது. அங்கு பக்தர்களும் வழிப்பட்டு வந்தனர்.

ஆனால் இவ்வாலயம் அமைந்துள்ள நிலம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பகுதி டிஎன்பி, ஒரு பகுதி உள்துறை அமைச்சு, ஒரு பகுதி போர்ட்டிக்சன் ஆதரவற்றோர் பிள்ளைகள் அறவாரியத்திற்கு சொந்தமாகும்.

இதனால் நிலத்தை விட்டு வெளியேறக் கூறி மூன்று தரப்பினரிடம் இருந்தும் எங்களுக்கு அழுத்தம் வந்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இப்பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் அறவாரியத்திற்கு சொந்தமான நிலத்தை திருப்பி தர ஆலய நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து டிஎன்பி, உள்துறை அமைச்சு ஆகிய தரப்பிலும் இருந்தும் எங்களுக்கு அழுத்தங்கள் வரும்.

இதன் அடிப்படையில் ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்ற நிர்வாகம் தயாராக உள்ளது.

ஆகையால் ஆலயத்திற்கு 100 மீட்டர் தொலைவிற்குள் உள்ள காலி நிலத்தை மாநில அரசு ஆலயத்திற்கு ஒதுக்கி தர வேண்டும்.

இதன் மூலம் எந்த ஒரு சர்ச்சைகளும் இல்லாமல் ஆலயங்களை நாங்கள் அந்த இடத்திற்கு மாற்றிக் கொள்வோம்.

இந்த விவகாரம் தொடர்பில் மாநில அரசு உட்பட பல தலைவர்களிடமும் நாங்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளோம்.

எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மாநில அரசு சுமுகமான தீர்வை வழங்க வேண்டும் என கண்ணன் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset