நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லுக்குட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிலப் பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வுக் காணப்பட்டது: சைட் அரிபின்

லுக்குட்:

லுக்குட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிலப் பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

போர்ட்டிக்சன் ஆதரவற்றோர் பிள்ளைகள் அறவாரியத்தின் பிரதிநிதி சைட் அரிஃபின் இதனை கூறினார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் லுக்குட் வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்குகிறது.

இவ்வாலயம் அமைந்து நிலத்தின் ஒரு பகுதி போர்ட்டிக்சன் ஆதரவற்றோர் பிள்ளைகள் அறவாரியத்திற்கு சொந்தமானதாகும்.

இந்நிலையில் இந்த இடத்தில் ஆதரவற்றோர் இல்லத்தை கட்ட அறவாரியம் முடிவு செய்துள்ளது.

ஆகையால் அறவாரியத்தின் தலைவர் மிஸ்லிமின் பின் துகிமான் தலைமையிலான குழு ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஆலய நிர்வாகம் மண்டபம் அமைந்துள்ள இடத்தை விட்டுத் தர ஒப்புதல் வழங்கியது.

அதே வேளையில் இவ்வாலயம் உள்துறை அமைச்சு, டிஎன்பி, அறவாரியத்தின் நிலத்தில் அமைந்துள்ளது.

இதனால் தொடர் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க ஆலயத்தை இட மாற்றம் செய்யவும் நிர்வாகம் தயாராக உள்ளது.

அதன் அடிப்படையில் ஆலய நிர்வாகத்திற்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அவத் கூறினார்.

நாட்டில் ஆலயப் பிரச்சினைகள் என்றாலே அது சர்ச்சையின் தான் முடிகிறது. ஆனால் இந்த ஆலயப் பிரச்சினை சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இது தான் மலேசியர்களின் ஒற்றுமை நல்லிணக்கத்தின் அடையாளம் என்று சைட் அரிஃபின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset