நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சின் சியூ செய்தித்தாள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு: உள்துறை அமைச்சு உத்தரவு

புத்ராஜெயா:

சின் சியூ செய்தித்தாள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள்  விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் காரணம் கேட்கும் கடிதத்தை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது என்று உள்துறை அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.

சீன அதிபர் ஷீ ஜின் பிங்கின் மலேசிய வருகையையொட்டி மலேசிய, சீனக் கொடிகளை  சம்பந்தப்பட்ட செய்தித் தாள் முதல் பக்கத்தில் வெளியிட்டது.

ஆனால் தேசியக் கொடியில் பிறை இல்லாத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிறை இஸ்லாத்தை கூட்டாட்சி மதமாகக் குறிக்கிறது.

இது தொடர்பில் செய்தித்தாள் பொறுப்பாளர்களை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சின் சியூ தினசரி செய்தித்தாளின் நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு தீவிரமாகவும் ஆழமாகவும் கருதுகிறது.

சின்னங்கள், பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும்) சட்டம் 1963 [சட்டம் 414], அச்சு அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984 [சட்டம் 301] ஆகிய இரண்டு தொடர்புடைய சட்டங்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சு உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சீன செய்தித்தாள் நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சு உரிய காரணம் கேட்கும் கடிதமும் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் நிலைத்தன்மை, நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினரையும் அமைச்சு பொறுத்துக்கொள்ளாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset