நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகள் இடம் மாற்றம் செய்ய அரசாங்கம் சிறப்பு மானியத்தை  ஒதுக்க வேண்டும்: அருள்குமார்

கோலாலம்பூர்:

குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய அரசாங்கம் சிறப்பு மானியத்தை ஒதுக்க வேண்டும்.

ஜசெக தேசிய உதவித் தலைவர் அருள்குமார் இதனை தெரிவித்தார்.

குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள் உடனடியாக இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக தோட்டப் புறங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் இப்போது குறைந்த மாணவர்களை கொண்டிருக்கிறது.

இந்தியர்கள் அதிகம் வாழும் நகர்புறங்களில் இந்த பள்ளிகள் இடம் மாற்றம் செய்ய அரசாங்கம் சிறப்பு மானியம் ஒதுக்க வேண்டும்.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ,  துணை கல்வியமைச்சர் வோங் கா வா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன்.

பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் பெயர் பட்டியலை அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன். மாநில அரசுகளும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்கி நிலத்தை வழங்கி வருகிறது.

மேலும் மாநில அரசுகள் தமிழ்ப் பள்ளிகள் இடமாற்றத்திற்கு நிலங்களை அடையாளம் கண்டுள்ளன.

அந்த வகையில் இந்த பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களிடம் பேசி ஒரு சிறப்பு மானியத்தை பெற்று தரும்படி ஜசெக அமைச்சர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

இன்று ஜசெக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset