நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ இக்பால் தலைமையில் 10ஆவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை மலேசியாவில் நடத்த டத்தோஸ்ரீ சரவணன் பரிந்துரை

திருச்சி:

10ஆவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை மலேசியாவில் நடத்த உங்களுடன் இணைய நான் தயாராக உள்ளேன்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இம் மாநாட்டை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்ததை நான் வியப்புடன் பார்க்கிறேன்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார்.

இது தான் ஒரு சிறந்த தலைவருக்கான முக்கிய அம்சமாகும்.

அதே வேளையில் ஒரு சிறந்த தலைவரும் தலைமைத்துவமும் இல்லை என்றால் ஒரு இனமே அழிந்து விடும்.

அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு சிறந்த தலைவரும் தலைமைத்துவமும் கிடைத்துள்ளதை எண்ணி மலேசிய தமிழர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

மேலும் தமிழ் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தமிழ் முஸ்லிம் மக்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

அவர்களின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் 10ஆவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடத்தப்பட வேண்டும்.

மலேசிய மாநாடு டத்தோ ஸ்ரீ இக்பால் அவர்களது தலைமையில் நடைபெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதில் இணைய நான் தயார் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset