செய்திகள் மலேசியா
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
புத்ரா ஜெயா:
இம்மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் தேர்தல்கள் மற்றும் கட்சியின் உயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து எழுந்த வதந்திகளுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைக்க மறுத்துள்ளார்.
முன்னதாக, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நூருல் இசாவைத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வழிவகை செய்வார் என்று செய்தி வெளியானது.
அது குறித்து அன்வார் பதிலளிக்கவில்லை. மாறாக, பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் இன்னும் திறக்கப்பட்டுள்ளது.
தான் இன்னும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் நகைச்சுவையாக இன்று புத்ராஜெயாவில் உள்ள சூராவ் அல்-இமானில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
மே 23-ஆம் தேதி நடைபெற உள்ள பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவிவிக்குத் தாம் போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதால பிரதமரின் மகள் நூருல் இசா தெரிவித்தார்.
நூரில் இசாவின் முடிவிற்கு பல பிகேஆர் கட்சித் தொகுதி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
2022-ஆம் ஆண்டு நூருல் இசா பிகேஆர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 4:36 pm
எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள், இராஜதந்திர ஒத்துழைப்பை மலேசியா நாடும்: ஜாஹித்
September 16, 2026, 4:24 pm
ஷீலா கொலை சம்பவம்; குடும்ப வன்முறையை இயல்பாக்க முடியாது: டாக்டர் லிங்கேஸ்வரன்
September 16, 2026, 3:39 pm
பெர்கேசோவின் மெகா i Lindung u திருவிழா: 60,000 பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது
September 16, 2026, 3:37 pm
இளைய தலைமுறையினருக்கான தமிழ்ச் சமய விழா: பத்துமலையில் சிறப்பாக நடைபெற்றது
September 16, 2026, 2:48 pm
தாப்பாவில் 200 சோலார் விளக்கு கம்பங்களை நிறுவ டத்தோஸ்ரீ சரவணன் தனது சொந்த நிதியை ஒதுக்கியுள்ளார்
September 16, 2026, 2:47 pm
மலாக்கா மாநில சட்டமன்றத்தின் கலைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டதை அப்துல் ரவுஃப் மறுத்துள்ளார்
September 16, 2026, 2:46 pm
ஈப்போவில் 46 பள்ளி மாணவர்கள் இன்ஃபுளூன்ஸா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோ சிவநேசன்
September 16, 2026, 2:45 pm
