நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது 

செமின்யே: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை செமின்யேவில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஐந்து சந்தேகநபர்களைத் தேடி வருகிறது 

காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் நாஸ்ரொன் அப்துல் யூசோஃப் இதனை உறுதிப்படுத்தினார். 

சிசிடிவி காமெராவின் அடிப்படையில் சந்தேக நபர்கள் யாவரும் முகமூடியை அணிந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். 

500 ரிங்கிட் மதிப்புடைய தங்க நகைகள், இரு விவேக கைத்தொலைபேசிகள் ஆகியவை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இதனால் மொத்தமாக 9 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது 

அரசு அதிகாரியைப் போல வேடமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395, 170இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக நாஸ்ரொன் கூறினார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset