
செய்திகள் மலேசியா
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதி; தமிழ்நாட்டிற்கு மலேசியத் தமிழர்கள் அந்நியர்கள் அல்ல: டத்தோஸ்ரீ இக்பால்
திருச்சி:
தமிழ்நாட்டிற்கு மலேசியத் தமிழர்கள் அந்நியர்கள் அல்ல என்று இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் வலியுறுத்தினார்.
தமிழ் நாட்டில் இருந்து மலேசியா உட்பட பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி சென்றவர்களை அயலக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அயலக தமிழர்கள் என்றால் அந்நிய நாட்டினர் என்று தான் அர்த்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாங்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் அல்ல.
காரணம் அகண்ட தமிழகத்ததைச் சேர்ந்த ஒரு பகுதி தான் இப்போது பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி என்றல் நாங்கள் எப்படி அந்நிய தமிழர்களாவோம்.
ஆகையால் மலேசிய தமிழர்களை இனி அயலக தமிழர்கள் என அழைக்கக் கூடாது.
அகண்ட தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் என அழைக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டில் மலேசியாவில் இருந்து எனது தலைமையில் 50க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் ஆதரவுடன் இம்மாநாட்டிற்கு 11 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.
அடுத்தாண்டு இம்மாநாடு மலேசியாவில் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
அப்படி வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாக நடத்த நாங்கள் தயார் என்று டத்தோஸ்ரீ முஹம்ம முஹம்மது இக்பால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm