நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பரியது: டத்தோஸ்ரீ சரவணன்

திருச்சி:

தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பரியது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு திருச்சியில் நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம் மாநாட்டை தொடக்கி வைத்து பேருரையாற்றவுள்ளார். 

இம் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் வாழ்த்துரை வழங்க டத்தோஸ்ரீ சரவணன் இன்று திருச்சி வந்தடைந்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் சமத், டத்தோஸ்ரீ சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கக், புலவர்களின் பங்கு அளப்பரியது.

அதன் அடிப்படையில்  இம் மாநாடு நிச்சயம் வெற்றி மாநாக அமையும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அப்துல் சமது, பெர்மிம் பேரவைத் தலைவர் ஷேக் ஃபரீதுத்தீன், சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவி, டத்தோ ஜமருல் கான், டத்தோ அப்துல் ஹமீத், ஹாஜி பஷீர் அஹ்மத், டத்தோ இஸ்மாயில், தொழிலதிபர் அபூபக்கர், வி பி குமார், டி மகேஷ் உட்பட பலரும் வரவேற்றனர்.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset