
செய்திகள் மலேசியா
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
குளுவாங்:
மழலையர் கூடத்தில் ஐந்து மாதம் குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர் இங்குள்ள குளுவாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இருப்பினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணை கோரினார்.
நீதிபதி ஒஸ்மான் அஃபெண்டி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 20 வயதுடைய அமீரா ஹஜிரா முஹம்மத் ஃபாரிட் ஒப்புதலை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணியளவில் ஐந்து மாத குழந்தைக்கு காயம் விளைவித்ததாக குத்தப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
2001ஆம் ஆண்டு சிறார்கள் சட்டத்தின் கீழ் குழந்தை பராமரிப்பாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை, 50 ஆயிரத்திற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படும்
ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றத்தால் மீண்டும் செவிமடுக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:48 am
கூலிம் பட்டாசு வெடி விபத்து தொடர்பில் 2 பேர் கைது
October 21, 2025, 9:00 am
ஜோகூரில் யானைகள் நடமாட்டம்
October 20, 2025, 6:37 pm
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை: 14 வயது மாணவனுக்கு இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு
October 20, 2025, 12:48 pm
கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மாணவி யாப் ஷிங் சூயென் சவ ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
October 20, 2025, 11:19 am