நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ டாக்டர் ஹாஜி செய்யது இப்ராஹிம் உட்பட 9 பேருக்கு இலக்கிய காவலர் விருது: தமிழக முதல்வர் வழங்கினார்

திருச்சி:

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் 9 பேருக்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இலக்கிய காவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாடு திருச்சியில் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

இதில் ஒன்பது பேருக்கு தமிழக முதல்வர் இலக்கிய காவலர் விருது வழங்கி சிறப்பித்தார்.

இதில் பெர்மிம் பேரவையின் முன்னாள் தலைவரும் இண்டர்நேஷனல் லா புக் சர்வீசஸ் நிறுவனத் தலைவருமான டத்தோ டாக்டர் ஹாஜி செய்யது இப்ராஹிம்  தமிழக முதல்வர் மு கா ஸ்டாலின் அவர்களிடமிருந்து விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset