
செய்திகள் மலேசியா
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
உலகம் முழுவதும் வர்த்தகத்துடன் தமிழையும் கொண்டு சேர்த்த தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
தமிழ் மொழி வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் தமிழ் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியானதாக உள்ளது.
குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்கள் உலகம் முழுவதும் வர்த்தகத்தை கொண்டு சென்று அதில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.
அதே வேளையில் அம்மக்கள் வர்த்தகத்துடன் தமிழ் மொழியையும் கொண்டு சேர்த்துள்ளனர்.
இதன் வாயிலாக தமிழ் மொழி இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இப்படி தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழ் முஸ்லிம் பங்கை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm