நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ நஜிப்பின் அரச மன்னிப்புக்கு பெருவாரியான மலேசிய இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பத்திற்கு மலேசிய இந்தியர்கள் அதிகமானோர் தங்களின் ஆதரவினைத் தெரிவித்து கொண்டுள்ளனர். 

மலேசிய இந்தியர்களில் 62.2 விழுக்காட்டினர் இந்த அரச மன்னிப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். மெர்டேக்கா சென்டர் இந்த பகுப்பாய்வினை வெளியிட்டுள்ளது. 

PROJEK SAMA என்ற பெயரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 27 முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை சுமார் 1,210 பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்து கொண்டதாக சொல்லப்படுகிறது 

இருப்பினும் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட கூடாது என்று 57.8 விழுக்காட்டினர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். 

இந்தியர்களுக்கு அடுத்து பூமிபுத்ரா சமூகத்தினர் பெருவாரியாக நஜிப்பிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.  50.5 விழுக்காடு அவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset