நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொய் பிரச்சாரங்களை நம்பாமல் எனக்கு வாக்களித்த கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் உறுப்பினர்களுக்கு நன்றி: குணராஜ்

கோத்தாராஜா:

பொய் பிரச்சாரங்களை நம்பாமல் எனக்கு வாக்களித்த கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் உறுப்பினர்களுக்கு நன்றி என்று  அத்தொகுதி தலைவர் குணராஜ் கூறினார்.

2025-2028ஆம் ஆண்டுக்கான கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் எனது தலைமையிலான அஸ்பிராசி கோத்தாராஜா குழு அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கு என்னுடைய நன்றி. 

மேலும் இந்த தேர்தல் கட்சித் தேர்தலாகும். இத்தேர்தலிலும் எனக்கு எதிராக பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பொய் பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல் கெஅடிலான்  உறுப்பினர்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

உறுப்பினர்களின் இந்த நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றுவேன். உங்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்,

மேலும் செந்தோசா சட்டமன்ற தொகுதி மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset