நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுக்மா விளையாட்டுப் போட்டியில் கபடி, சிலம்பம் நிலை நிறுத்தப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

சுக்மா விளையாட்டுப் போட்டியில் கபடி, சிலம்பப் போட்டிகள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

கபடி, சிலம்ப போட்டிகள் இந்தியர்களின் பாரம்பரிய போட்டியாக விளங்குகிறது.

இருந்தாலும் தற்போது அவை தேசிய போட்டியாக விளங்குகிறது. குறிப்பாக மலாய், சீனர்கள் இந்த விளையாட்டுப் போட்டி பங்கேற்கின்றனர்.

அதிகமான பதக்கங்களையும் அவர்கள் வெல்கின்றனர்.

இதன் அடிப்படையில் அப்போட்டிகள் சுக்மா விளையாட்டுப் போட்டியில் இடம் பெறுகின்றன.

ஆனால் ஒவ்வொரு முறையில் பல கோரிக்கைகளுக்கு பின் தான் இப்போட்டிகள் சுக்மாவில் இடம் பிடிக்கின்றன. இந்நிலை தான் அடுத்த சுக்மாவிலும் ஏற்பட்டுள்ளது.

இப்போட்டிகள் சுக்மாவில் இடம் பிடிக்க வேண்டும் என இரு போட்டி சங்கங்களின் தலைவர்கள் முயற்சிகளை தொடங்கி விட்டனர். இந்நிலை மாற வேண்டும்.

சுக்மாவில் சிலம்பம், கபடிப் போட்டிகள் தொடர்ச்சியாக இடம் பெற வேண்டும்.

இதற்கான உத்தரவாதத்தை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சும்  அரசாங்கமும் வழங்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset