
செய்திகள் மலேசியா
மறைந்த பாக் லாவுக்கு பிரதமர், முன்னாள் பிரதமர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய பள்ளிவாசலில் மறைந்த துன் அப்துல்லாஹ் அஹமது படாவிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்தார்.
ஐந்தாவது பிரதமரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரதான பிரார்த்தனை மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்பு, பிரதமர் பிற்பகல் 1 மணிக்கு தேசிய பள்ளிவாசல் மைதானத்திற்கு வந்தார்.
முன்னாள் பிரதமர்கள் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் ஆகியோர் தங்கள் கட்சி உறுப்பினர்களுடன் முன்னதாக ஜனாஸா தொழுகைக்கு வந்திருந்தனர்.
பின்னர் பிரதமர் அரசாங்கத் தலைவர்களுடன் இறுதி மரியாதை செலுத்தினார்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹித் ஹமிடி, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன், மாட் சாபு ஆகியோரும் பிரதமருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm