
செய்திகள் மலேசியா
பேரங்காடியில் ஆடவர் ஒருவர் பாராங் கத்தியால் வெட்டப்பட்டார்; பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம்: போலிஸ்
சிரம்பான்:
பேரங்காடியில் ஆடவர் ஒருவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம்.
சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹத்தா சே டின் இதனை கூறினார்.
நேற்று இரவு இங்குள்ள ஒரு பேரங்காடியில் நடந்த ஒரு சம்பவத்தில், சந்தேக நபர் ஒருவர் பாராங் கத்திய பயன்படுத்தி ஒருவரை கடுமையாக வெட்டினார்.
மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவம் ஒரு வளாகத்தின் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலானது.
நெரிசலான பகுதியில் பாராங்கத்தியால் ஒருவர் பாதிக்கப்பட்டவரை சாதாரணமாக வெட்டுவதைக் காட்டியது.
பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்ததாக தனது தரப்பினர் நம்புவதாகக் கூறினார்.
இரவு சுமார் 8.15 மணியளவில் நடந்த 40 வயது நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிய சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பாதிக்கப்பட்டவர் புகைபிடித்துக்கொண்டே தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2025, 9:32 pm
ரபிசி ரம்லியின் அமைச்சர் பதவியை ஏற்க டத்தோஸ்ரீ ரமணனே சரியான தேர்வாக இருப்பார்: அஹ்...
May 28, 2025, 6:12 pm
சனிக்கிழமை முதல் மேம்பாட்டுப் பணிகளுக்காக கேடிஎம், ஈடிஎஸ் ரயில் சேவைகளின் கால அட்ட...
May 28, 2025, 6:10 pm
தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: கோபி...
May 28, 2025, 6:03 pm
மலேசியா ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கிறது; மோதலை அல்ல: சைபுடின்
May 28, 2025, 6:02 pm
ரபிஸி எங்கு சென்றாலும், அவரது கருத்துக்கள் மறக்கப்படாது: நூருல் இசா
May 28, 2025, 4:44 pm
இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹமத...
May 28, 2025, 3:39 pm
அவசரக் கால மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஆசியான் நடவடிக்கை
May 28, 2025, 3:38 pm
எதிர்கால வெற்றியின் அளவுகோலாகச் செயற்கை நுண்ணறிவு அமையும்: தெங்கு ஜஃப்ருல்
May 28, 2025, 2:38 pm
புருனை சுல்தானின் உடல்நிலை சீராகவுள்ளது: பிரதமர் அன்வார்
May 28, 2025, 2:26 pm